Paristamil Navigation Paristamil advert login

"அநியாய விலை உயர்வுக்கு இடமில்லை” – அரசின் அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கை!!

"அநியாய விலை உயர்வுக்கு இடமில்லை” – அரசின் அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கை!!

9 பங்குனி 2026 திங்கள் 07:43 | பார்வைகள் : 1416


மத்திய கிழக்கில் நிலவும்  யுத்தத்தினை காரணமாக்கி பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலைகளை அநியாயமாக உயர்த்துவதை கட்டுப்படுத்துவதற்காக  அரசு விசேட நடவடிக்கை எடுக்கிறது. பிரதமர் Sébastien Lecornu அறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் 500 விசேட கண்காணிப்பு சோதனைகள் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்களில் நடத்தப்படவுள்ளன. வழக்கமாக அரை ஆண்டில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புகளுக்கு சமமான நடவடிக்கை குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க தரவுகளின்படி, நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் SP95-E10 பெட்ரோல் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக 10 சென்ட் உயர்ந்துள்ளது. அதேவேளை டீசல் விலை பிப்ரவரி 27 அன்று லிட்டருக்கு சுமார் 1.72 யூரோ இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 1.98 யூரோ ஆக உயர்ந்து 26 சென்ட் (15%) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த திடீர் விலையேற்றம் குறித்து Frédéric Plan, Fédération française des combustibles, carburants et chauffage அமைப்பின் தேசிய ஆலோசகர், “பல பொருளாதார நெருக்கடிகளை நான் கண்டுள்ளேன். ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய பெரிய விலையேற்றம் ஏற்பட்டதை நான் இதுவரை காணவில்லை” என தெரிவித்துள்ளார்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026