Paristamil Navigation Paristamil advert login

சைபிரஸ் விரைகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

சைபிரஸ் விரைகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

9 பங்குனி 2026 திங்கள் 06:00 | பார்வைகள் : 1021


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மார்ச் 9, திங்கட்கிழமை சைப்பிரஸ் நாட்டுக்கு அவசர பயணம் மேற்கொள்கின்றார். அங்கு சைபிரஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாட உள்ளார்.

மத்திய கிழக்கு கடலின் கிழக்கு திசையில் உள்ள தீவான இந்த சைபிரஸ் மீதும் ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இன்று அங்கு பயணமாகும் மக்ரோன், Paphos  நகரில் வைத்து அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸினை சந்திக்க உள்ளார்.

அவருடன், பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸினையும் சந்திக்க உள்ளார்.

கடந்த வாரத்தில் பல்வேறு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஈராக், சிரியா, லெபனானை தாண்டிச் சென்று சைபிரஸ் தீவை தாக்கியிருந்தன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்குச் சொந்தமான இராணுவத்தளம் ஒன்றும் அழிக்கப்பட்டிருந்தது. அதை அடுத்து, சைபிரசின் நட்புறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நிலவரத்தை நேரில் பார்வையிடமும் ஜனாதிபதி மக்ரோன் அங்கு விரைகிறார்.


“"சைப்ரஸைச் சுற்றியும் கிழக்கு மத்தியதரைக் கடலிலும் எங்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கு பங்களிக்கும் நோக்கில்," என எலிசே மாளிகை தெரிவித்தது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026