Paristamil Navigation Paristamil advert login

2026 ஆம் ஆண்டு சீனா - அமெரிக்க உறவுகள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர்

2026 ஆம் ஆண்டு சீனா - அமெரிக்க உறவுகள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர்

8 பங்குனி 2026 ஞாயிறு 14:43 | பார்வைகள் : 1288


2026 ஆம் ஆண்டு சீனா-அமெரிக்க உறவுகள் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய பாதை என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை 08.02.2026 நடைபெற்ற 14 வது தேசிய மக்கள் காங்கிரஸின் நான்காவது அமர்வின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உறவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சீனாவும் அமெரிக்காவும் பெரிய நாடுகள். ஒரு தரப்பால் மற்றொன்றை மாற்றிவிட முடியாது.

ஆனால் நாம் எவ்வாறு இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்பதை நாமே தேர்ந்தெடுக்க முடியும். அதாவது, பரஸ்பர மரியாதை, அமைதியான சகவாழ்வு மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

இதுவே சீன மற்றும் அமெரிக்க மக்களின் நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் உகந்ததாகும்.

சீனா-அமெரிக்க உறவுகளில் இந்த ஆண்டு ஒரு 'முக்கியமான ஆண்டு.

உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான செயல்திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன. சீனா எப்போதும் இதில் உறுதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் உள்ளது. அமெரிக்கத் தரப்பும் அதே திசையில் செயல்படுவது மிகவும் அவசியமாகும்.

இரு தரப்பும் நேர்மையுடனும் நல்எண்ணத்துடனும் பழகும்போது, நம்மால் ஒத்துழைப்புப் பட்டியலை நீடிக்கவும், பிரச்சினைகளின் பட்டியலைக் குறைக்கவும் முடியும்.

2026-ஆம் ஆண்டு சீனா-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான, நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஒரு அடையாள ஆண்டாக அமையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.