நண்பர் அர்ஜுன் டெண்டுல்கரைத் தொடர்ந்து..! இந்தி நடிகையை கரம்பிடிக்கும் பிரித்வி ஷா
8 பங்குனி 2026 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 1793
இந்திய கிரிக்கெட் வீரரான பிரித்வி ஷாவுக்கும் அவரது காதலியும், நடிகையுமான அக்ரிதி அகர்வாலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஐபிஎல் தொடர்களில் நல்ல பங்களிப்பை தந்தாலும், தேசிய அணியில் சரியான இடத்தைப் பிடிக்க போராடி வரும் வீரர் பிரித்வி ஷா.
26 வயதாகும் பிரித்வி ஷா இந்தி நடிகையும், சமூக வலைதள பிரபலமுமான அக்ரிதி அகர்வாலை காதலித்து வந்தார்.
இந்த ஜோடி அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது. பிரித்வி ஷாவும், அர்ஜுன் டெண்டுல்கரும் சிறுவயது நண்பர்கள் ஆவர்.
பிரித்வி ஷா மற்றும் அக்ரிதி அகர்வால் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
பிரித்வி தனது வருங்கால மனைவிக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை வழங்கும் புகைப்படம் உள்ளிட்ட சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் "களத்தில் சிக்ஸர்கள் முதல் களத்திற்கு வெளியே வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறுவது வரை. அதுதான் எனது சரியான இன்னிங்ஸ்!" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்வி-அக்ரிதியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan