Paristamil Navigation Paristamil advert login

இயக்குநராக... ஹீரோவாக... முதல் படத்தில் கென் கருணாஸ் செய்த சம்பவம்!

இயக்குநராக... ஹீரோவாக... முதல் படத்தில் கென் கருணாஸ் செய்த சம்பவம்!

8 பங்குனி 2026 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 752


கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அவரது மகன் கென் கருணாஸ். ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்தார். அவருக்கு அடையாளத்தை கொடுத்தது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம்.

அதைத் தொடர்ந்து ‘விடுதலை 2’ படத்தில் அவரது ஆக்ரோஷமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பலரின் பாராட்டையும் பெற்றார் கென் கருணாஸ். இதனிடையே தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் கென் கருணாஸ். இதன் மூலம் இயக்குநர் அனுபவத்தையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது அவர் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘யூத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தின் தலைப்பையே இந்தப் படத்திற்கும் வைத்துள்ளனர்.

பார்வத்தா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பள்ளி பின்னணியில் உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாகவும் கென் கருணாஸ் நடிக்கிறார். சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மார்ச் 19ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

பள்ளி மாணவர்கள் கதையை மையப்படுத்திய இதில் கென் கருணாஸுக்கு ஒரே நேரத்தில் 3 காதலிகள், அவர்களை சுற்றிய கதை, அவர்களுடைய வாழ்க்கை, காதல் போன்றவற்றை பேசுகிறது. ஜிவி பிரகாஷின் துள்ளல் இசையோடு ஜாலி ஃவைப்பாக இருக்கும் இதன் டிரைலர் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதற்கிடையே கதையின் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே தந்தையை மிஞ்சியிருக்கிறார் கருணாஸின் மகன் நடிகர் கென். அதாவது இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 40 நாட்களில் முடித்துள்ளார்.

இயக்குனராகும் முயற்சியில் இறங்கியிருக்கும் கருணாஸ், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருக்கிறார். வாடிவாசல் திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக இயங்கப்போவதாக கருணாஸ் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

தந்தை இயக்குநர் ஆகும் முயற்சியில் இருக்கும் போது அவரை விஞ்சி மகன் இயக்குநர் ஆனதுடன் 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து அசத்தியுள்ளார். படமும் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026