Paristamil Navigation Paristamil advert login

போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரான் ஜனாதிபதியுடன் பேசிய புடின்

போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரான் ஜனாதிபதியுடன் பேசிய புடின்

7 பங்குனி 2026 சனி 15:41 | பார்வைகள் : 1541


ஈரான் ஜனாதிபதி பெஷேஷ்கியனுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கிரெம்ளின் ஒரு விடயத்தை கூறியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த உரையாடலில் உச்ச தலைவர் காமெனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற மூத்த அரசியல் பிரமுகர்கள் என கொல்லப்பட்டவர்களுக்காக புடின் இரங்கல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இராணுவ பலத்தை விட இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மத்திய கிழக்கை சுற்றியுள்ள சர்ச்சைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தனது நிலைப்பாட்டை புடின் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

அதேபோல், பெஷேஷ்கியன் தங்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்ததாக கிரெம்ளின் வாசிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.