துபாய் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் முயற்சி - வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு!
7 பங்குனி 2026 சனி 15:04 | பார்வைகள் : 288
மத்திய கிழக்கில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலகின் பரபரப்பான துபாய் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 07.03.2026 காலை துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலாகப் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், வானில் கரும்புகை மூட்டம் தென்பட்டதாக ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் சிதறிய பாகங்கள் கீழே விழுந்ததாலேயே இந்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக துபாய் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகப் பல விமானங்கள் தரையிறக்கப்படாமல் வானிலேயே வட்டமிட வைக்கப்பட்டதை விமான கண்காணிப்பு இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததுடன், நான்கு பணியாளர்கள் காயமடைந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ட்ரோன் (Drone) தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஈரானின் இந்தத் தாக்குதல்கள் துபாய் விமான நிலையத்துடன் மட்டுப்படாது, அபுதாபி விமான நிலையம், பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) ஹோட்டல் ஆகியவற்றையும் இலக்கு வைத்துள்ளன.
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை துபாயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது விழுந்த ட்ரோன் பாகங்களினால் அங்குக் கடும் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதல்களை விஸ்தரித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan