Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ட்ரோன் தாக்குதலை முறியடித்த உக்ரைன்

ரஷ்ய ட்ரோன் தாக்குதலை முறியடித்த உக்ரைன்

6 பங்குனி 2026 வெள்ளி 11:08 | பார்வைகள் : 769


உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 4 ஆண்டுகளை கடந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அவ்வப்போது தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை உக்ரைனின் வான் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இருண்ட நேரத்தில் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைனிய படைகள் சுட்டு வீழ்த்தி உள்ளது.

டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலில், ரஷ்யா பல வகையிலான 141 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலை முன்னெடுத்ததாகவும், இதில் 111 ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முக்கியமாக ஈரானிய வடிவமைப்பான ஷாஹெட் மற்றும் கெர்பெரா மற்றும் இடால்மாஸ் ஆகிய ட்ரோன் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 24 ட்ரோன்கள் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உக்ரைனின் 16 இலக்குகளை தாக்கியுள்ளன.

ரஷ்ய ட்ரோன்கள் இன்னும் வானில் உலா வந்து கொண்டிருப்பதாகவும், எனவே வான்வழி ஆபத்து நீடிப்பதாக உக்ரைனிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026