Paristamil Navigation Paristamil advert login

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

 குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

5 பங்குனி 2026 வியாழன் 07:04 | பார்வைகள் : 1225


மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகின்றது.

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

குவைத்தின் முபாரக் அல் கபீர் பகுதியிலிருந்து தென்கிழக்காக 30 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணெய் கசிவு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், வெடிப்புச் சம்பவத்துடன் எவ்வித தீ விபத்துக்களும் பதிவாகவில்லை எனவும் UKMTO குறிப்பிட்டுள்ளது.

கப்பலில் இருந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அ

வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து சிறிய படகு ஒன்று வேகமாகத் தப்பிச் சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்