இலங்கையில் வளர்ப்பு நாய் கொண்டு வந்த பந்து வெடித்ததில் சிறுவன் காயம்!
26 பங்குனி 2026 வியாழன் 15:54 | பார்வைகள் : 1877
பல்லேவெல – பந்துராகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசித்திரமான சம்பவத்தில், நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்லேவெல பொலிஸார் தெரிவித்ததாவது, சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்துள்ளது.
இந்த வெடிப்பில் காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan