இலங்கையில் அதிகரித்த கொள்ளை சம்பவங்கள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
25 பங்குனி 2026 புதன் 17:07 | பார்வைகள் : 1176
இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழலை இருபத்தி நான்கு மணிநேரமும் பொலிஸார் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர். எனினும் ஒருசிலரின் கவனக்குறைவு காரணமாக இவ்வாறான சம்பவங்களில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் சொத்துகளையும் இழக்க நேரிடுகின்றனது. குறிப்பாக பொது இடங்களில் அல்லது பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் போது, குழுவொன்று திட்டமிட்ட வகையில் சிநேகபூர்வமாக பழகி நம்பிக்கையை வென்று, மயக்க மருந்து கலந்த உணவு அல்லது பானங்களை வழங்கி கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொக்கடிச்சோலைப் பகுதியில் இரு பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மயக்க மருந்து ஊட்டப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அத்தோடு மற்றைய பெண்மீது கொலை முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் வீதிகளில் மூன்றாம் தரப்பினர் வழங்கும் வாகன வசதிகளைப் பெறுவதைத் தவிர்ப்பதோடு, அறிமுகமில்லாதவர்கள் வழங்கும் இனிப்புகள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம்.
அத்தோடு, தங்கம் மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும்போது பிறரின் அவதானத்தை ஈர்க்காத வகையில் கவனமாக இருப்பதோடு , சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக 119 அல்லது 118 ஆகிய பொலிஸ் அவசர தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தகவல் அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்ககளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan