இலங்கையில் தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு
25 பங்குனி 2026 புதன் 12:11 | பார்வைகள் : 259
மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் பெற்றோர் யார்?, எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan