மனிதர்கள் தானா? Reddit-ல் Face ID அறிமுகம் செய்ய திட்டம்
23 பங்குனி 2026 திங்கள் 13:09 | பார்வைகள் : 964
Reddit வலைதளத்தில் புதிதாக பயனர்களின் அடையாள சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்ப்படவுள்ளன.
சமூக வலைத்தளமான Reddit தனது பயனர்கள் உண்மையான மனிதர்களா அல்லது தானியங்கி ‘பாட்களா' (bots) என்பதை உறுதிப்படுத்த Face ID மற்றும் Touch ID போன்ற உயிரியல் அடையாள (Biometric Verification) முறைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Reddit நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Steve Huffman, சமீபத்திய போட்காஸ்ட் ஒன்றில், “AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உண்மையான பயனர்களின் ஈடுபாடு பாதிக்கப்படுகிறது. அதனைத் தடுக்க, மனிதர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் புதிய முறைகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “Reddit-இன் அடையாளமே பயனரின் அடையாளம் தெரியாமல் இருப்பது தான் (anonymity). அதனை பாதிக்காமல், Face ID போன்ற முறைகள் மூலம் பயனர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, சமூக வலைத்தளங்களில் AI-generated content அதிகரிப்பால் உருவாகும் சவால்களை சமாளிக்க உதவும். பயனர்கள் தங்கள் தனியுரிமையை இழக்காமல், தளத்தில் உண்மையான மனிதர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என Reddit நம்புகிறது.
தற்போது, பல சமூக வலைத்தளங்கள் போலியான கணக்குகள் மற்றும் தானியங்கி ‘பாட்கள்’ காரணமாக சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
Reddit-இன் புதிய முயற்சி, சர்வதேச அளவில் சமூக வலைத்தள பாதுகாப்பு மற்றும் உண்மையான பயனர் ஈடுபாடு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan