Paristamil Navigation Paristamil advert login

நகராட்சி தேர்தல் 2026: நண்பகல் வரை 20.33 சதவீதம் வாக்குப்பதிவு!!

நகராட்சி தேர்தல் 2026: நண்பகல் வரை 20.33 சதவீதம் வாக்குப்பதிவு!!

22 பங்குனி 2026 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 450


நாடு முழுவதும் நடைபெறும் நகராட்சி தேர்தலின் இரண்டாம் சுற்றில், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நிலவரப்படி வாக்காளர் பங்கேற்பு 20.33 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டு (15.29%) மற்றும் 2014 ஆம் ஆண்டு (19.83%) நிலவரங்களை விட அதிகமாகும். 

இதனால், வாக்காளர்களின் ஈடுபாடு இம்முறை சற்றே அதிகரித்துள்ளதாகக் காணப்படுகிறது. முதல் சுற்றில் மொத்த வாக்காளர் பங்கேற்பு 57.17 சதவீதமாக இருந்தாலும், அது கடந்த காலங்களில் காணப்பட்ட வாக்காளர் குறைவை மாற்ற போதுமானதாக இல்லை. அதேவேளை, அனைத்து வாக்காளர்களும் இந்த இரண்டாம் சுற்றில் வாக்களிக்க அழைக்கப்படவில்லை. ஏனெனில், முதல் சுற்றிலேயே 94 சதவீதமான நகராட்சிகளில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதனால், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நகரங்களில் மட்டுமே இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சில பகுதிகளில் அதிகமான வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக Deux-Sèvres, Lot மற்றும் Cantal பகுதிகளில் 33 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மறுபுறம் Seine-Saint-Denis, Nord மற்றும் Yvelines பகுதிகளில் குறைந்த அளவு வாக்கு பதிவு காணப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பெரும்பாலான நகரங்களில் வாக்கு பதிவு அதிகரித்துள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டின் நிலவரத்துடன் ஒப்பிடும்போது, பாதி நகரங்களில் மட்டுமே வாக்கு பதிவுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.