Paristamil Navigation Paristamil advert login

அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!

 அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!

21 பங்குனி 2026 சனி 15:53 | பார்வைகள் : 345


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மும்பை சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கி வரும் அளவில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நியமிப்பது என தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கும் போது 234 தொகுதிகளில் பாதியில் கூட வேட்பாளரை தேர்ந்தெடுக்காத விஜய் திடீரென மும்பை புறப்பட்டு சென்றது விமர்சிக்கப்பட்டது..

நேற்று இரவு 7 மணி அளவில் தனி விமான மூலம் அவர் மும்பை கிளம்பி சென்றார். ஜனநாயகன் தொடர்பான ஷூட்டிங் வேலை என சிலர் சொன்னார்கள்.. கட்சிக்கு நிதி திரட்ட போகிறார் என சிலர் சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் விஜய் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே விஜய் அங்கு சென்றது தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.