டாக்டர் ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?
21 பங்குனி 2026 சனி 07:33 | பார்வைகள் : 291
கணவன்: பக்கத்து வீட்டுக்காரன் சரியான பைத்தியமா இருப்பான் போல!
மனைவி: ஏன் என்னாச்சு?
கணவன்: நான் ஹேப்பி பொங்கல்னு சொல்றேன்.. அவன் ஹேப்பி இட்லினுட்டு போறான்.
பேனை தொடைச்சி பரண்ல இருந்த சாமானை எல்லாம் இறக்கி, ஏத்தி, சுண்ணாம்பு அடிச்சு.. வீட்டைக் கழுவி.. ஒரு வாய் பொங்கல் சாப்பிடுறதுக்கு இந்த வீட்ல என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு?
“ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.
“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
“ஃபார் எக்ஸாம்ப்பிள்?”
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”
“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”
“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”
“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”
“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”
(உலகத்துல...நிறையப்பேரு செமி தானாம்.)






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan