மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தல்!!
20 பங்குனி 2026 வெள்ளி 07:45 | பார்வைகள் : 2279
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து 19ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
குறிப்பாக ஈரான் தொடர்பான பிரச்சினையில் பிரான்ஸ் முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திலேயே செயல்படுகிறது என்றும், தனது தேசிய நலன்களை காக்கும் நிலைப்பாட்டில் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Brussels நகரில் நடைபெற்ற மாநாட்டின் பின்புலத்தில் பேசிய அவர், “பதற்றம் தணிப்பு” (désescalade) என்பதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலக எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பது குறித்து, எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை வழிநடத்தும் அமைப்பின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முயற்சிக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகளின் ஆதரவைப் திரட்ட பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் மக்ரோன் தெரிவித்தார். மேலும், ஐ.நா. பொதுச் செயலாளர் Antonio Guterres, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.
இதேவேளை, லெபனான் தொடர்பாக, அந்த நாட்டிற்கு உதவி செய்ய பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற வேண்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால், இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் குண்டுவீச்சுகள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்ரோன் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan