ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
19 பங்குனி 2026 வியாழன் 15:46 | பார்வைகள் : 296
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் பிரச்சினை காரணமாக படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தன்னுடைய கதைக்களங்களில் உண்மை சம்பவம், அரசியல், சமூக பிரச்சினையை எடுத்து பேசக்கூடியவர் இயக்குநர் ஹெச்.வினோத். அந்த வகையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தையொட்டி இருந்தாலும், இதில் சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் படத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் தனுஷை வைத்து படம் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், தனுஷ் ‘கர’ படத்தை முடித்துவிட்டு தற்போது ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கிறார்.
அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஹெச்.வினோத் - தனுஷ் இணைய வாய்ப்பில்லை என்றே சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சூர்யா, ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan