Paristamil Navigation Paristamil advert login

மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி தொடர்கிறது..

மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி தொடர்கிறது..

19 பங்குனி 2026 வியாழன் 15:32 | பார்வைகள் : 1629


1992ம் ஆண்டு வௌவிந்த 'ரோஜா' படத்தில் இயக்குனர் மணிரத்னம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஏஆர் ரஹ்மான். அதன்பின் இருவரது கூட்டணியும் எந்த ஒரு பிரிவும் இல்லாமல் கடந்த 34 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, சாய் அபயங்கர் இசையமைக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை பொய்யான தகவல் என மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடிக்கப் போவதாக சொல்லப்படும் அப்படத்தில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது கூட்டணியைத் தொடர்கிறார்கள். இப்படத்திற்காக இரண்டு பாடல்களையும் ரஹ்மான் ஏற்கெனவே முடித்துவிட்டாராம். இசை உரிமை கூட 15 கோடிக்கும் மேல் விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியிருக்கையில் அக்கூட்டணி பிரியப் போவதாக யாரோ பொய்யான செய்தியை பரப்பிவிட்டிருக்கிறார்கள்.