Paristamil Navigation Paristamil advert login

வான்படை இரவு முழுவதும் ரஃபேல், மிராஜ் விமானங்களுடன் அணு ஆயுத மாதிரி பயிற்சி!!

வான்படை இரவு முழுவதும்  ரஃபேல், மிராஜ் விமானங்களுடன் அணு ஆயுத மாதிரி பயிற்சி!!

17 பங்குனி 2026 செவ்வாய் 22:21 | பார்வைகள் : 607


பிரான்ஸ் வான்படை மற்றும் விண்வெளிப் படை “Poker” எனப்படும் அணு ஆயுத தாக்குதல் மாதிரி பயிற்சியை திங்கடள் கிழமை இரவு முழுவதும் நடத்தியது. இந்தப் பயிற்சியில் ரஃபேல், மிராஜ் 2000, AWACS மற்றும் A330 MRTT போன்ற 40 விமானங்கள் பங்கேற்று, கற்பனை அணுத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டன. 1964ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பயிற்சி ஆண்டுக்கு நான்கு முறை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், பிரான்சின் அணு தடுப்பு திறனை எதிரிகளுக்கு காட்டுவதும், அதன் செயற்பாட்டு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுமாகும். சர்வதேச சூழ்நிலை பதற்றமாக இருந்தாலும், பிரான்ஸ் தனது பாதுகாப்பு திறனை வெளிப்படுத்த முயல்கிறது. ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதையும் அறிவித்துள்ளார்.

“dissuasion avancée” (மேம்பட்ட தடுப்பு) என்ற புதிய கொள்கையின் கீழ், ஐரோப்பிய கூட்டாளர் நாடுகள் இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்கலாம். இது எதிரியின் கணக்கீடுகளை சிக்கலாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் அதிகாரிகள் முன்பு நடந்த பயிற்சியைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சியில் உண்மையான அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானங்கள் நீண்ட தூரம் பறந்து, குறைந்த உயரத்தில் வேகமாகச் சென்று, ஏவுகணை தாக்குதலை மாதிரியாகச் செய்கின்றன. GPS மற்றும் தொடர்பு அமைப்புகள் குறிக்கப்படுகின்றன, மேலும் கற்பனைப் போர் சூழலில் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தப் பயிற்சி கடினமான சூழலில் செயல்படும் திறனை மேம்படுத்துகிறது.