இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள்
1 புரட்டாசி 2017 வெள்ளி 09:29 | பார்வைகள் : 15374
சரும சுருக்கங்கள், சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
உங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 1
ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
யோகார்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க் :
முட்டையின் வெள்ளைக் கரு உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே இது சரும கோடுகளை காணாமல் செய்து விடும். தேனில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
வெள்ளைக் கரு - 1
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு நீரில் கழுவினால் இளமையான அழகான சருமம் உடனே கிடைக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan