இலங்கையில் மரத்தில் கறிவேப்பிலை பறித்த தாய் மகளுக்கு நேர்ந்த கதி
7 மாசி 2026 சனி 16:00 | பார்வைகள் : 2072
கலஹா - நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கறிவேப்பிலை மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மின்சாரக்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan