கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்தூரியம் செடிகளுடன் இரு பெண்கள் கைது
7 மாசி 2026 சனி 09:34 | பார்வைகள் : 1586
சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அந்தூரியம் செடிகளை, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இரண்டு பெண் பயணிகள் இன்று சனிக்கிழமை (7) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண் பயணிகளும் தாய்லாந்திலிருந்து இன்று சனிக்கிழமை (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்த 45 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களின் பொதிகளில் இருந்து 436 அந்தூரியம் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இருப்பினும், இதற்காக விவசாயத் திணைக்களத்தின் இறக்குமதி அனுமதி அவர்களிடம் இல்லை.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிகளை மீறி அவர்கள் இந்த தாவரங்களை கொண்டு வந்துள்ளனர்.
எனவே, இரண்டு பெண்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan