லூவர் கொள்ளை! - மீண்டு வந்த கிரீடம்!!
5 மாசி 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 5360
லூவர் மியூஸியத்தில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, மீட்கப்பட்ட கிரீடம் ஒன்று அதன் பழைய வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் முனைப்பில் Eugénie பேரரசின் கிரீடத்தை தவறவிட்டுச் சென்றிருந்தனர். மியூஸியத்துக்கு வெளியே இருந்து மீட்கப்பட்ட இந்த கிரீடம் சேதமடைந்திருந்தது. சேதமடைந்த அதனை திருத்தும் பணிகள் இடம்பெறு வந்திருந்தது.
56 மரகதங்களும், 1,354 வைரக்கற்களும் என உருவாக்கப்பட்ட விலையுயர்ந்த இந்த கிரீடம் தற்போது முற்று முழுதாக சீரமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் பழைய வடிவத்துக்கே மாற்றப்பட்டதாக லூவர் மியூஸியம் அறிவித்துள்ளது.
குறித்த கிரீடம் திருடப்பட்டபோது, 1,354 வைரக்கற்களில் பத்து சிறிய கற்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan