இலங்கையில் மனநலச் சுகாதார சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
4 மாசி 2026 புதன் 17:58 | பார்வைகள் : 1739
மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
இலங்கையின் தற்போதைய மனநலக் கொள்கையானது நூறு ஆண்டுகள் பழமையானது. எனவே, அதனை நவீனமயப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
நாட்டின் மனநலச் சுகாதார சேவையானது தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் காணப்படுகிறது.
இது ஒரு கடினமான காரியம் என்ற போதிலும், இதற்கான முதற்கட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அவை தற்போது பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan