வாகன சாரதிகள் - கட்டாயச் சிறை எதிர்கொள்ள நேரும் புதிய சட்டம்!!
4 மாசி 2026 புதன் 13:35 | பார்வைகள் : 400
வாகன சாரதிகள் மீது புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு இணங்காமை 'சிறைத்தண்டனைக்குரிய' குற்றமாக கருதப்படவேண்டும் எனும் வாதம் வலுத்துள்ளது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி நிறுத்தாமல் பயணிக்கும் சாரதிகளுக்கும் - காவல்துறையினருக்கும் இடையே இருக்கும் முரண்பாடு ஒரு நீண்டகால பிரச்சனையாகும்.
இந்நிலையில், இணங்காத சாரதிகளுக்கு 'கட்டாய சிறை' வேண்டும் என நாட்டின் 86% சதவீதமான மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்தனர். 13% சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்பும், 1% சதவீதமானோர் கருத்துக்கள் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக CSA நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
விரைவில் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan