RER A ரயில் பாதையில் மின்கம்பி முறிவு: Disneyland Paris போக்குவரத்து சேவை பாதிப்பு!!
4 மாசி 2026 புதன் 13:07 | பார்வைகள் : 3971
பரிஸில் RER A ரயில் வழித்தடத்தில் மேல்நிலை மின்கம்பி கம்பி முறிவால், இன்று டோர்சி (Torcy) மற்றும் மார்ன்-லா-வல்லே – செஸ்சி (Marne-la-Vallée – Chessy) இடையே ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
காலை 6:30 மணிக்கு தொடங்கிய இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, முதலில் காலை 9:30 மணிக்கு சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் Disneyland Paris-இற்கு செல்லும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கோளாறால் RER A வழித்தடத்தின் மற்ற பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக RATP மாற்றுப் பேருந்துகளை இயக்கியுள்ளது.
தினமும் சுமார் 15 இலட்சம் பயணிகள் பயன்படுத்தும் ஐரோப்பாவின் மிக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த இடையூறு, ஆயிரக்கணக்கான பயணிகளை பாதித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan