RER B, C, D பயணிகளுக்கு இழப்பீடு!!!
3 மாசி 2026 செவ்வாய் 21:32 | பார்வைகள் : 1358
கடந்த ஆண்டு இல்-து-பிரான்ஸ் பகுதியில் RER ரயில்களில் ஏற்பட்ட அதிகமான தாமதங்களைத் தொடர்ந்து, பயணிகளுக்கான இழப்பீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்காக, RER B, C மற்றும் D வழித்தடங்களில் உள்ள ஐந்து கிளைகள் இப்போது இழப்பீடு பெறத் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கமாக இந்த கிளைகளை பயன்படுத்தும் பயணிகள் தாமதங்களுக்காக நிதி இழப்பீடு பெற முடியும்.
இழப்பீடு பெறத் தகுதியான கிளைகள்:
- RER B-யின் Aulnay–Mitry-Claye மற்றும் Aulnay–CDG2,
- RER C-யின் Dourdan–La Norville,
- RER D-யின் Creil–Goussainville (nord-வடக்கு) மற்றும் Vigneux–Corbeil-Essonnes (sud-தெற்கு) பகுதிகள் ஆகும்.
இந்த வழித்தடங்களில் 2025 ஆம் ஆண்டில் பயணிகள் தொடர்ந்து போக்குவரத்து சிக்கல்களை சந்தித்ததால், இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021 முதல், Île-de-France Mobilités அமைப்பு, குறைந்தது மூன்று மாதங்களுக்கு 80 சதவீதத்திற்கு கீழ் நேரம் தவறாமையை பின்பற்றிய வழித்தடங்களின் நிரந்தர பயணிகளுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது.
சில வழித்தடங்கள் தொழில்நுட்ப ரீதியாக இந்த வரம்பை சற்றே தாண்டினாலும், பயணிகள் எதிர்கொண்ட உண்மையான சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டில் விதிமுறைகளுக்கு சிறிய விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு கோரிக்கைகளுக்கான இணைய தளம் மார்ச் தொடக்கத்தில் திறக்கப்படும் மற்றும் ஒரு மாதம் செயல்படும்.
மாதாந்திர அல்லது ஆண்டு Navigo சந்தா வைத்திருக்கும் தகுதியான பயணிகள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு 2025 கட்டணத்தின் அடிப்படையில், அரை மாத Navigo சந்தா தொகை, அதாவது 44,40 யூரோ, வங்கி பரிமாற்றம் மூலம் திருப்பி வழங்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan