ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்தில் கலந்துகொள்ள உள்ள நடிகர், நடிகைகள் யார்... யார்?
3 மாசி 2026 செவ்வாய் 15:19 | பார்வைகள் : 426
நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் திருமணத்திற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 26-ம் தேதி ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் உறுதியாகிவிட்டதாகவும், ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இவர்கள் திருமணத்திற்காக உதய்பூர் அரண்மனை அலங்கரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்படுவது தெரிகிறது.
திருமண ஏற்பாடுகள் நடப்பதால், ரகசியமாக திருமணம் நடக்கிறதா என ரசிகர்கள் கேட்கின்றனர். நிச்சயதார்த்தம் போலவே திருமணத்தையும் ரகசியமாக நடத்துகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில், திருமணம் குறித்து கேட்டபோது, 'யாருடைய திருமணம்?' எனக் கேட்டு ராஷ்மிகா மழுப்பலாக பதிலளித்தார். ராஷ்மிகா, விஜய் குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஹோட்டலில் தங்கி திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பல பிரபலங்களின் திருமணம் நடந்த உதய்பூர் அரண்மனையிலேயே இவர்களது திருமணமும் நடைபெற உள்ளது.
விஜய்-ராஷ்மிகா ரகசியமாக திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்வதாகக் கூறப்படுகிறது. இவர்களது நிச்சயதார்த்தமும் ரகசியமாகவே நடந்தது. டெஸ்டினேஷன் வெட்டிங் டிரெண்டைப் பின்பற்றி, ராஷ்மிகா-விஜய் திருமணம் செய்துகொள்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு. அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, சமந்தா போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
திருமண கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா இருவரும் தங்கள் அடுத்த படமான 'ரணபலி' பணிகளில் பிசியாக உள்ளனர். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan