ஈரான்–அமெரிக்கா பதற்றத்தின் நடுவில் பிரான்ஸ் படைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்ரோன் உறுதி!!
3 மாசி 2026 செவ்வாய் 14:48 | பார்வைகள் : 4450
ஈரான், ஐரோப்பிய நாடுகளின் படைகளை தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள நிலையில், புரட்சிக் காவலர்களுக்கு நெருக்கமான Fars செய்தி நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள Al Dhafra இராணுவ தளத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்தத் தளத்தில் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் படையினர் தங்கியுள்ளனர். இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் படையினர் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், நிலைமையை கூட்டாளி நாடுகளுடன் இணைந்து மதிப்பீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள பிரான்ஸ் படைகள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காகவும், கூட்டாளி நாடுகளின் படைகளைப் பயிற்றுவிப்பதற்காகவும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக தங்களது வான்வெளி, நிலப்பரப்பு அல்லது கடல்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது.
இதே நேரத்தில், ஈரான் தனது மக்களை மதிக்க வேண்டும் என்றும், அங்கு நடந்த கடுமையான அடக்குமுறைகள் குறித்து கவலை இருப்பதாகவும் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan