பிரெஞ்சு நபருக்கு ஆசியநாடொன்றில் மரண தண்டனை - இறுதி நிமிடத்தில் மாறிய தீர்ப்பு!!
3 மாசி 2026 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 1126
பிரான்சைச் சேர்ந்த Tom Felix என்பவருக்கு ஆசிய நாடான மலேசியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நிமிடத்தில் அவருக்கான தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது.
மலேசியாவின் லங்காவி நகரில் கடந்த 2023 ஓகஸ்ட்டில் இருந்து சிறைவைக்கப்பட்டுள்ள அவருக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்திருந்தது. அவர் மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 21 மாதங்கள் சிறைவாசத்தின் பின்னர், இன்று பெப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
அவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை தீர்ப்பு, இறுதி நிமிடத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
Tom Felix பிரெஞ்சு நாட்டவராவார். அவர் மலேசியாவில் உணவகம் ஒன்றை நடாத்துகிறார். அவரது உணவகத்தில் இருந்து சில கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடைய நண்பர் ஒருவருடன் இணைந்து 40,000 யூரோக்கள் முதலீடு செய்து குறித்த உணவகத்தை நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan