பாடசாலை உணவு சர்ச்சையில் பிரபல சமையல் கலைஞரின் குற்றச்சாட்டுக்கு நகராட்சி விளக்கம்!!
3 மாசி 2026 செவ்வாய் 08:03 | பார்வைகள் : 1071
பிரபல சமையல்கலைஞர் மிசெல் சாரான் (Michel Sarran), பரிஸ் 18-வது வட்டாரத்தில் உள்ள மழலையர் பாடசாலையில் படிக்கும் தனது 5 வயது பேரக்குழந்தைக்கு வழங்கப்பட்ட பாடசாலை உணவை விமர்சித்து, இன்ஸ்டாகிராமில் ஒரு உணவு தட்டின் புகைப்படத்தை வெளியிட்டார்.
உணவின் அளவையும், குறிப்பாக அதன் தரமும் தோற்றமும் குழந்தைகளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்றும், “சுவைக் கல்வி எங்கே?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். குழந்தைகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது ஒரு முக்கிய பொது சுகாதார பிரச்சினை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பாடசாலை உணவுப் பொறுப்பில் உள்ள நகராட்சி துணை மேயர் Gérald Briant, அந்த புகைப்படத்தில் காணப்படுவது முழுமையற்ற உணவு தட்டு என விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், பருப்பு (lentilles) மற்றும் கரட் போன்ற முக்கிய பகுதிகள் அந்த தட்டில் காணப்படவில்லை என்றும், உண்மையான மெனு ஊட்டச்சத்து நிபுணரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அன்றைய முழு மெனு சட்டப்படி தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பாடசாலை உணவுகளின் அளவு Égalim சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது; குழந்தைகளுக்கு தேவையான புரத அளவும் இதில் அடங்கும்.
நகராட்சி தரப்பில், ஒரு உணவுக்கான மூலப்பொருட்களின் செலவு சுமார் 2.80 யூரோ என்றும், பெற்றோருக்கு வருமானத்தைப் பொறுத்து 13 சென்ட் முதல் 7 யூரோக்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்த, பெற்றோருடன் ஒரு சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக நகராட்சி அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan