அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி தாக்குதல்கள்! - இருவர் மருத்துவமனையில்!!
3 மாசி 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5108
பரிசில் அடுத்தடுத்து இரண்டு கத்திக்குத்து தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது சம்பவம் பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் Cité Notre-Dame அருகே, Rue de la Comète வீதியில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது. நாற்பது வயதுடைய ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். உடலில் இரண்டு இடங்களில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவ உதவிக்குழுவினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இடம்பெற்று, ஒருமணிநேரத்தின் பின்னர், Gare Montparnasse நிலையத்தின் அருகே மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. 30 வயதுடைய ஒருவர் நடு வீதியில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கானார். அவர் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதில், குற்றுயிராக மருத்துவமனையில் சேர்ப்பிக்கபட்டார்.
மேற்படி இரு தாக்குதல்கள் தொடர்பிலும் 7 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan