Popote நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பால்மாவும் திரும்ப பெறப்படுகிறது!!
2 மாசி 2026 திங்கள் 21:38 | பார்வைகள் : 3499
பிரான்சில் குழந்தைகளுக்கான பால்மா மாசுபாடு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், Nestlé, Lactalis, Danone, Babybio ஆகியவற்றிற்கு பிறகு Popote என்ற புதிய நிறுவனமும் தங்களுடைய premier âge இரு தொகுதிகளை சந்தையிலிருந்து திரும்ப பெற்றுள்ளன.
இந்த மீட்பு நடவடிக்கைகள் தற்போது 60 நாடுகளை பாதித்துள்ளதால், பெற்றோரிடையே கவலை அதிகரித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை காரணங்களால் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் அரசு குழந்தைகளுக்கான பாலில் அனுமதிக்கப்படும் céréulides என்ற பக்டீரியாவின் அளவை பாதியாக குறைத்துள்ளது. இந்த பக்டீரியா வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படுத்தும் விஷத்தை உற்பத்தி செய்கிறது; அதனால் சுகாதார பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாசுபாட்டுக்கான முக்கிய காரணமாக, எல்லா தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான மூலப்பொருள், சீனாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் தயாரித்த எண்ணெய் மாசடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு அளவுகளை மேலும் கடுமையாக்க ஐரோப்பிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan