ஒரே வாரத்திலேயே பரிஸ் சுத்தமாகும்: ரட்சிதா தாத்தி உறுதி!!
2 மாசி 2026 திங்கள் 08:39 | பார்வைகள் : 1110
2026ஆம் ஆண்டு பரிஸ் நகராட்சி தேர்தலுக்கான வேட்பாளரான ரட்சிதா தாத்தி, தன்னை மேயராகத் தேர்ந்தெடுத்தால், ஒரே வாரத்திலேயே பரிஸ் நகரை சுத்தமான நகரமாக மாற்ற முடியும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
BFMTV தொலைக்காட்சியில் பேசிய அவர், “பரிஸ் மிகவும் அழுக்காக உள்ளது; சில பகுதிகள் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன” எனக் கூறியுள்ளார். தற்போதைய அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பே முக்கிய பிரச்சினை என்றும், பணியாளர்களை குற்றம் சொல்லவில்லை என்றும் அவர் விளக்கி உள்ளார்.
பரிஸ் நகரின் சுத்தம் செய்யும் துறைக்கு 800 மில்லியன் யூரோக்கள் பட்ஜெட்டும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் இருந்தாலும், பெரும்பாலானோர் நிர்வாகப் பணிகளில் இருப்பதாக ரட்சிதா தாத்தி விமர்சித்துள்ளார். மேயராக இருந்தால் வளங்கள் அல்ல, அமைப்பை மாற்றுவதே தீர்வு என கூறிய அவர், குப்பை சேகரிப்பை தனியார்மயமாக்க ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவது சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் காரணமாக சவாலானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan