Paristamil Navigation Paristamil advert login

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - பெரும் ஆபத்து தவிர்ப்பு!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - பெரும் ஆபத்து தவிர்ப்பு!!

2 மாசி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 5074


எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. பெரும் ஆபத்து ஒன்று தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

'போயிங் 777' ரக எயார் பிரான்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாங்க்கொக்கில் இருந்து பரிசை நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில், அஜர்பைஜானுக்கு மேலாக பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் 'அவசர'கால சமிக்ஞ்சை எழுப்பப்பட்டது.  விமானத்தில் 'இலத்திரனியல் பொருள் உருகுவது போன்ற மணம்' எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதை அடுத்து, விமானம் உடனடியாக தரையிறக்கப்பட தீர்மானிக்கப்பட்டதாகவும், அதை அடுத்து ஜோர்ஜியா தலைநகர் Tbilisi இன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துரித முடிவினால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.