பிப்ரவரி மாதத்தில் மேலதிகமாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!!
1 மாசி 2026 ஞாயிறு 14:57 | பார்வைகள் : 1672
பிப்ரவரி 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல், மின்சார சந்தாக்கள் , மோட்டார் பாதை சுங்கச்சாவடிகள், வங்கி கட்டணங்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதங்களில் குறைவை தொடர்ந்து மேலதிகமாக நடைமுறைக்கு வரும் மாற்றங்களை பார்க்கலாம்.
டக்ஸி கட்டணங்கள் உயர்வு
புதுப்பிக்கப்பட்ட டக்ஸி கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் போலவே, புதிய டக்ஸி கட்டணங்கள் பிப்ரவரியில் அமலுக்கு வருகின்றன. அனைத்து டக்ஸிகளும் ஒரு சவாரிக்கு €8 என்ற நிலையான குறைந்தபட்ச கட்டணமும், ஒவ்வொரு முறை ஒரு டக்ஸியை அழைக்கும் போதும், ஒரு பிக்-அப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது €4.48 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. பயணித்த தூரத்தின் விலை இதனுடன் சேர்க்கப்படுகிறது.
விதிவிலக்காக இரவு நேரங்கள் அல்லது சேவை பொது வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் முன்பு ஒரு கி.மீட்டருக்கு 1.29 யூரோக்களாக இருந்த கட்டணம் 1.30 யூரோக்களாக வசூலிக்கப்படும்,
சில சிகரெட்டுகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள்
சில சிகரெட் பெட்டிகளின் விலைகள் அதிகரிக்க உள்ளதாக சுங்கத்துறை பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முன்பு 12.50 யூரோக்களாக சில சிகரெட்டுகளின் விலை இப்போது 12.70 யூரோக்களாக அதிகரித்துள்ளது. மற்றய சில சிகரெட்டுகள் 11.70 இலிருந்து 11.50 யூரோக்களாகக் குறையக்கூடும்.
CAF சலுகைகளில் எதிர்பார்க்கப்படும் குறைப்புகள்
ஜனவரி 2026 இல் பெறப்பட்ட உரிமைகளுடன் தொடர்புடைய குடும்ப கொடுப்பனவுகள் ( CAF) பிப்ரவரியில் பல குடும்பங்களுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வருமான உச்சவரம்புகளில் 1.8% என்ற மட்டுப்படுத்தப்பட்ட அதிகரிப்பு, ஆண்டின் தொடக்கத்திலிருந்து வேகமாக அதிகரித்துள்ள 2024 வருமானங்களின் (+3%) கருத்தில் கொண்டு, சில குடும்பங்களுக்கு CAF உதவிகள் நிறுத்தப்படும்.
முக்கிய எரிவாயு விலையில் குறைவு
எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, எரிவாயுவின் அளவுகோல் விலை குறைந்து வருகிறது . சமையல் மற்றும் சூடான நீருக்கு ஒரு kWhக்கு சராசரி விலை €0.132 இலிருந்து €0.13043 ஆகக் குறையும். வெப்பமாக்குவதற்க்கு, விலை €0.102 இலிருந்து €0.09983 ஆகக் குறையும்.
பிப்ரவரி 1, 2026 முதல் பொருந்தும் புதிய எரிவாயு விலைகள், 11,200 kWh நுகர்வுடன், எரிவாயுவால் சூடாக்கப்படும் ஒரு வீட்டுக்கு ஆண்டொன்றிற்கு 23 யூரோக்களாக குறையும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan