பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது
1 மாசி 2026 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 1796
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து 01 மில்லியன் ரூபாயினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாத்தறை பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை திக்வெல்ல - வெஹெல்ல பகுதியில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் வெஹெல்ல, உருகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan