Paristamil Navigation Paristamil advert login

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு” - இந்த புதிய சட்டமாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்!!

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு” - இந்த புதிய சட்டமாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்!!

1 மாசி 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1420


விமானத்தில் பயணம் செய்யும் முன்னர், இந்த பெப்ரவரி மாதம் முதல் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் தொடர்பில் கட்டாயம் அறிந்து வைத்திருந்தல் வேண்டும்.

விமான சேவைகள் தாமதமாக புறப்பட்டாலோ, இரத்துச் செய்யப்பட்டாலோ வழங்கப்படும் இழப்பீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

3 மணிநேர தாமதத்துக்காக வழங்கப்படும் இழப்பீடு, இனிமேல் குறுகிய தூர பயணத்துக்கு 4 மனிநேரமாகவும், நீண்ட தூர பயணத்துக்கு 6 மணிநேரமாகவும் மற்றப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகை 250 தொடக்கம் 600 யூரோக்கள் வரை இருந்த நிலையில், அது 300 யூரோக்கள் முதல் 500 யூரோக்கள் வரை பரிந்துரைக்கப்படுகிறது.

இழப்பீடு வழங்காத விமான சேவைகள் மீது நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிந்தது. ஆனால் பெப்ரவரி 7 ஆம் திகதியின் பின்னர் அவ்வாறு நேரடியாக வழக்கு தொடுக்க முடியாது.

நீங்கள் கட்டாயமாக ஒரு இடைத்தரகர் மூலமாகவே நீதிமன்றத்தை அணுக முடியும். Médiateur du Tourisme அல்லது Voyage போன்றவர்களை அணுகி, அவர்களூடாகவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். அவ்வாறில்லாமல் நேரடியாக நீதிமன்றத்துக்குச் சென்றால், வழக்கு தானியங்கி முறையில் தள்ளுபடியாகிவிடும்.

தனி விமான பயணத்துக்கும் இது பொருந்தும், குடும்பமாக அல்லது குழுவாக பயணம் மேற்கொள்ளும் போதும், ஒரு இடைத்தரகரைக் கொண்டே வழக்கில் வாதாட முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்