மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் - உக்ரைன் நாட்டுக்கு எதிர்பாராத பாதிப்புகள்
3 பங்குனி 2026 செவ்வாய் 14:39 | பார்வைகள் : 354
ஈரான் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்குவதை தடுப்பதற்காக என்று கூறி ஈரான் மீது தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.
அரசியல் நிபுணர்கள் சில நாட்களுக்குள் எல்லாம் முடிந்துவிடும் என்று ஈரான் விடயத்தில் ட்ரம்ப் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் என்கின்றார்கள் .
ஈரான் இப்படி சுழன்று சுழன்று பல்வேறு நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை போலவும் உள்ளது.
ஈரான் போர், எதிர்பாராதவிதமாக உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களை பெருமளவில் நம்பி உள்ளது.
உக்ரைன் போர் துவங்கும்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பைடன். அவர் உக்ரைனுக்கு உதவுவதாக வாக்களித்திருந்த நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானார்.
ட்ரம்ப் ஜனாதிபதியானதுமே, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதி உதவியை நிறுத்தியதுடன், உக்ரைனுடன் உளவுத்துறை தகவல்களை பகிர்வதையும் தற்காலிகமாக நிறுத்தினார்.
தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலில் அமெரிக்காவும் பங்கேற்றுள்ளதால், தனது ஆயுதங்களை அது பெருமளவில் ஈரான் போரில் செலவிடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் அந்த ஆயுதங்கள் தனக்குக் கிடைக்கும் என உக்ரைன் நம்பியிருந்த நேரத்தில், ஈரான் போர் துவங்கியதால் உக்ரைனுக்கு ஆயுதங்கள் விடயத்தில் ஏமாற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் கவனம் இனி ஈரான் போர் பக்கம் திரும்பிவிடும், உக்ரைன் மீதான கவனம் குறைந்துவிடும் என ஐரோப்பாவுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த மாதம், அதாவது, மார்ச் மாதம் 5 மற்றும் 6 திகதிகளில், அபுதாபியில், உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருந்தன.
ஆனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இனி அந்த பேச்சுவார்த்தை நடக்குமா அல்லது அது வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முயன்று வரும் நிலையில், அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் சைப்ரஸ் நாட்டில் நடைபெற இருந்தன.
ஆனால், ஈரான் ட்ரோன்கள் சைப்ரஸ் நாட்டிலுள்ள பிரித்தானிய ராணுவ தளங்களை தாக்கியதைத் தொடர்ந்து, அந்த பேச்சுவார்த்தைகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் போர் துவங்கியபோதே அது உலக முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உணவுப்பற்றாக்குறை வரை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
ஆக, உலகம் ஒரு சமுதாயம், அதில் எந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டாலும் அது மற்ற நாடுகளை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கத்தான் செய்யும்.
உக்ரைன் போர் உலகில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ட்ரம்ப் புதிதாக ஒரு பிரச்சினையை துவங்கியுள்ளார்.
கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ட்ரம்ப் நினைத்ததுபோல ஈரான் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றால், அது உக்ரைன் மீது மட்டுமல்ல, மற்ற நாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan