Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனான் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு  இஸ்ரேல் எச்சரிக்கை!

2 பங்குனி 2026 திங்கள் 06:31 | பார்வைகள் : 661


ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நகரங்களில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திலாவது பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய உச்சத் தலைவர் காமேனியின் படுகொலை ஆகியவற்றுக்குப் பழிவாங்கும் நோக்கில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்தது.

இதனையடுத்து, ஹிஸ்புல்லாக்களின் கட்டுப்பாட்டில் உள்ள லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் பலவற்றின் மீது இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல், தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரியும் அதற்கான பாரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.   

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026