Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகம் அடித்து உடைக்கப்பட்டது - 9 பேர் பலி

பாகிஸ்தானில்  அமெரிக்க துணைத் தூதரகம் அடித்து உடைக்கப்பட்டது - 9 பேர் பலி

1 பங்குனி 2026 ஞாயிறு 15:46 | பார்வைகள் : 1255


ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டமையால் பாகிஸ்தானிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் அமெரிக்க துணைத் தூதரகத்தின் ஜன்னல்களை அடித்து உடைத்து, தீ வைத்து எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடந்த குழப்பத்தினை அமெரிக்க இராணுவத்தினர் கட்டுப்படுத்த முற்பட்டவேளை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்