Paristamil Navigation Paristamil advert login

செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்க தயார் - ஹவுதி எச்சரிக்கை

செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்க தயார் - ஹவுதி எச்சரிக்கை

28 மாசி 2026 சனி 13:51 | பார்வைகள் : 404


செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதலை தொடங்க போவதாக ஹவுதி படையினர் அறிவித்துள்ளனர்.

செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கப்போவதாக ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை அறிவித்துள்ளது.

இந்த தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் முக்கிய அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கியமான வணிக கடல்வழியாக கருதப்படும் செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதலை தொடங்க போவதாக ஹவுதி படையினர் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது ஹவுதி படையினரின் இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர், ஈரான் மீதான அழுத்தத்தை குறைப்பதற்காக ஹவுதி படையினர் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏமன் தலைநகர் சனா(Sanaa) உட்பட பெரும்பாலான வடக்கு பகுதிகள் ஹவுதி படையினரின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.