Paristamil Navigation Paristamil advert login

திபெத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளான விமானம் - 20 பேர் பலி

திபெத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளான விமானம் -  20 பேர் பலி

28 மாசி 2026 சனி 08:52 | பார்வைகள் : 564


திபெத் பொலிவிய விமானப்படையின் C-130H (Hercules) ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் (La Paz )லா பாஸில் உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மத்திய வங்கியில் இருந்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற பொலிவிய விமானப்படையின் C-130 சரக்கு விமானம், லா பாஸ் அருகே உள்ள எல் ஆல்டோ விமான நிலையம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது 20 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் எல் ஆல்டோ பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பணக் கட்டுகளை பிடிக்க பொதுமக்கள் பரபரப்பாக சென்றதால், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து மத்திய வங்கி தெரிவித்ததாவது, இந்த ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இல்லாதவை மற்றும் சட்டப்படி மதிப்பு வழங்கப்படாதவை என குறிப்பிட்டுள்ளது.