பாகிஸ்தான் அதிரடி துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 34 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
26 மாசி 2026 வியாழன் 15:14 | பார்வைகள் : 311
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து அந்நாட்டின் இராணுவம், பொலிஸ் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நடத்திய பாரிய துப்பாக்கிச் கூடு தாக்குதலில் 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நேற்று புதன்கிழமை 25.02.2026 பாகிஸ்தான் இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் தற்போது பயங்கரவாதிளுக்கு எதிராக, நேரடி துப்பாக்கிப் பிரயோக பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை 24.02.2026 பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான், லக்கி மார்வத், பன்னு மாவட்டங்களில் இடம்பெற்ற வெவ்வேறு நான்கு மோதல்களில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் உயிரிழந்த 26 பயங்கரவாதிகளும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத்தினர் கூறுகின்றனர்.
மேலும், நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் சோப் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மற்றுமொரு இராணுவத் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அந்த எட்டு பேரும் பலுச் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல்களைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் வசமிருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan