சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து - 41 பேர் பலி
26 மாசி 2026 வியாழன் 15:04 | பார்வைகள் : 345
சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
அந்த தீவிபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், தீயணைப்புக் கருவிகள், தீயை அணைக்க பயன்படும் போர்வைகள் மற்றும் புகையைக் கண்டுபிடிக்க பயன்படும் கருவிகளை வாங்கி வீடுகளில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த துயர சம்பவம் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு இந்நிலையில், அந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும், விரைவில் 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கப்படும் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
அந்த தீவிபத்து எப்படி நடந்தது, அதை எப்படி தவிர்த்திருக்கலாம் என தெரிந்துகொள்ள தாங்களும் விரும்புவதாக தெரிவித்துள்ள சுவிஸ் ஜனாதிபதியான கய் பார்மலின், உண்மை வெளிவரவேண்டும், அந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்னும் மக்களுடைய எண்ணங்களை ஃபெடரல் கவுன்சிலும் பகிர்ந்துகொள்கிறது என்றும் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan