Paristamil Navigation Paristamil advert login

ஈரானுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்கா

26 மாசி 2026 வியாழன் 05:38 | பார்வைகள் : 212


அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

இந்த தடைகள், ஈரான் தனது ஏவுகணை திட்டத்துக்கு நிதி திரட்டும் நோக்கில் எண்ணெய் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்படும் கப்பல்களை குறிவைத்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது “State of the Union” உரையில் ஈரானை மீண்டும் கடுமையாக எச்சரித்ததற்கு அடுத்த நாளே அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க நிதித்துறை செயலாளர் Scott Bessent வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் சட்டவிரோத எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் பணத்தை சுத்திகரித்து, அணு மற்றும் பாரம்பரிய ஆயுத திட்டங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்வதுடன், பயங்கரவாத ஆதரவு குழுக்களுக்கும் நிதி வழங்குகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “அதிபர் டிரம்ப் தலைமையில், ஈரானின் ஆயுத திறன் மற்றும் பயங்கரவாத ஆதரவுக்கு அதிகபட்ச அழுத்தம் தொடரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா “சட்டவிரோத” எனக் குறிப்பிடும் எண்ணெய் விற்பனையை, தனது சொந்த எரிபொருள் ஏற்றுமதியாக ஈரான் விளக்கி, தனது எரிசக்தி துறைக்கு எதிரான நடவடிக்கைகளை “கடல் கொள்ளை” என விமர்சித்துள்ளது.

புதிய தடைகளின் கீழ் 12 கப்பல்கள், மேலும் எண்ணெய் விற்பனை மற்றும் ஆயுதக் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் பல நிறுவனங்கள் மற்றும் நபர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடைகளின் மூலம், குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களின் அமெரிக்காவிலுள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், அமெரிக்க குடிமக்கள் அவர்களுடன் நிதி பரிவர்த்தனை மேற்கொள்வது பெரும்பாலும் சட்டவிரோதமாகும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்