Paristamil Navigation Paristamil advert login

டிரம்ப் வீட்டுக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற இளைஞர்கள் சுட்டுக்கொலை

 டிரம்ப் வீட்டுக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற இளைஞர்கள் சுட்டுக்கொலை

23 மாசி 2026 திங்கள் 08:00 | பார்வைகள் : 421


அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி கூறுகையில்,

டிரம்ப் வீட்டிற்குள் ஆயுதத்துடன் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைய முயன்ற நபரை ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு 20 வயது இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபரிடம் துப்பாக்கி வைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்