மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொலை
23 மாசி 2026 திங்கள் 07:56 | பார்வைகள் : 430
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான 'ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த, எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.
எனினும் இந்த தகவலை , மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஜலிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த போதைப்பொருள் கும்பல் தற்போது மெக்சிகோ நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan