Paristamil Navigation Paristamil advert login

குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா?

குளிர் காலத்தில்  சாப்பிட வேண்டிய  உணவுகள்  பற்றி  தெரியுமா?

28 தை 2026 புதன் 12:58 | பார்வைகள் : 558


குளிர்காலம் வந்துவிட்டாலே சூடாக பஜ்ஜி, போண்டா, டி, காரசாரமான உணவுகளை சாப்பிட, குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவார்கள்.. உண்மையில் குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்.. எதை தவிர்க்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.பொதுவாக குளிர்காலத்தில் சூடான பொரித்த உணவுகள் நாவுக்கு சுவையாக இருக்கும்.. அதேநேரம் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதேபோல், குளிர்ந்த உணவுகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.. பிரிட்ஜில் இருந்து எடுத்து அப்படியே சாப்பிடுவது, குளிர் பானங்கள் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த பால், குளிர்ந்த சாதம், ஐஸ் கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.. குளிர்ந்த உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் ஜீரண சக்தி பலவீனமடையும்.. எனவே இதை தவிர்ப்பதற்காக எப்போதும் புதிதாக சமைத்த சூடான பொருளை எடுத்துக் கொள்வது நல்லது.. குளிர் காலங்களில் சூப் மிகவும் நல்லது.. அது உடலுக்கு வெப்பத்தை கொடுத்து குளிச்சியிலிருந்து காப்பாற்றும்.

குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பேணி காப்பதாக நினைத்துக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சிலர் தவிர்த்து விடுவார்கள் ஆனால் முற்றிலும் அப்படி தவிர்க்கக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.. குறிப்பாக நெய் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளை குளிர்காலங்களில் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்..

குளிர்காலத்தை வாத காலம் என முன்னோர்கள் அழைப்பார்கள்.. எனவே அப்போது பரோட்டா, சப்பாத்தி, காய்கறி சாலட் போன்ற அதிகப்படியான உலர்ந்த உணர்வுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் வாதம்  அதிகரிக்கும். அதோடு இந்த வகையான உணவுகள் உடலில் ஈரப்பதத்தை குறைத்து பல்வேறு உடல் பிரச்சினைகளை உருவாக்கும்.. எனவே அதை தவிர்க்க உணவில் சிறிதளவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.. அதேபோல் ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலின் சமநிலையில் பாதுகாக்க முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்